Monday, January 20, 2014

யார் படிக்க இந்த "ஆவிப்பா" ?

            "எல்லாம் தெரிந்தவர்கள்தான் கவிதைகளும், கதைகளும் எழுத வேண்டும் என்றிருந்தால் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்திருக்காது."
                                                                                                    -கோவை ஆவி 

                   இலக்கியமோ,  இலக்கணத்தோடு கூடிய சொற்றோடரோ எதிர்பார்க்கின்ற ஆள் நீங்கள் என்றால்  ஆவிப்பா நிச்சயம் உங்களுக்கான புத்தகம் அல்ல. எளிமையான வார்த்தைகளும், எதார்த்த உணர்வுகளும் மட்டுமே இதில் இருக்கும்.  யாரையும் "பகடி" செய்தோ, மற்றவர்களை காயப் படுத்தும் வார்த்தைகளோ நிச்சயம் இதில் இருக்காது.  

                     ஆகச் சிறந்த "உலக சினிமாக்களின்" நடுவே வந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கமும்" மக்களால் ரசிக்கப்பட்டு  வெற்றியடைந்த படம்தான். இந்த "ஆவிப்பாவும்" அதுபோன்ற ஒரு படைப்பு தான்.  கண நேரம் கூட சிந்திக்காமல் வெளிவந்த முத்தாக மற்றவர்களுக்கு தெரியலாம்.. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.



                      ஒரு வாசகனாய் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு நிச்சயம் உரிமை இருக்கிறது. ஆனால் வெளிவராத ஒரு புத்தகத்தின் தரத்தை பற்றி விமர்சிப்பது நிச்சயம் வேதனைக்குரியது. இது போன்ற பலவற்றையும் நான் எதிர்பார்த்து தானிருந்தேன் என்ற போதும் என் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கூர்வாளே கீறுமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ யார் மீதும் திணிக்கப் படுவதற்கு அல்ல இந்த ஆவிப்பா.. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் கேலி பேசிவிட்டு 'வெளிநாடு' செல்லுங்கள்.. இரண்டும் எனக்கு சந்தோசம் தான்.. குடிக்கறதுக்கு காப்பி வேணும், அது உயர்தர "காபி டே" வோ இல்லே தெருமுனையில் இருக்கும் டீக்கடையோ அது எனக்கு கவலையில்லை.. நட்போடு குடிப்பதில் தான் சந்தோசம் இருக்கிறது..

                     வெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன்!

11 comments:

  1. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    உண்மைதான். அதுவும் இப்போது பதிப்பாளர்கள் முன்வராத நிலையில் படைப்பாளிகள் செலவழித்து புத்தகம் கொண்டுவரும் கடினமான நிலைதான். விமர்சனம் வேறு.. கேலி வேறு.. நம் முயற்சி நல்ல எழுத்தை நோக்கியே இருக்கட்டும். !

    ReplyDelete
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப ரொம்ப நன்றி சார்.. உங்க வார்த்தைகள் நிச்சயம் ஊக்கம் குடுக்கற மாதிரி இருக்கு..

      Delete
  3. இது எப்போ இருந்து

    ReplyDelete
  4. நாங்க வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தை ரெம்ப ரசிச்சவங்க தான் சார். புக் ரிலீஸ் பண்ணின உடனே கிடைக்கும் இடம் சொல்லுங்க,
    வாங்கி படிக்கணும்.....
    வாழ்த்துக்கள் சார்.....

    ReplyDelete
  5. காத்திருக்கிறோம்...
    வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. காத்திருக்கிறேன்...... நண்பா,
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  7. ஒரு படைபாளனாய் ரிஆக்டிவாக இருப்பது நல்லது.
    அப்போதுதான் படைப்புகள் வரும் ..
    உங்கள்மீது விமர்சனங்கள் வரும் பொழுது ப்ரோஆக்டிவாக இருங்கள்.

    உங்களை நான் அவமானப் படுத்தினேன் என்றால் அதற்கான வலியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது.

    உங்களுக்குத் தானே. நீங்கள் வார்த்தைகளால் காயப்படும் அளவிற்கு என் பலவீனமாக இருக்கிறீர்கள்?

    வலிகள் புரிவதால் இந்த வழியைப் பகிர்ந்தேன்.
    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete
  8. நான் பகிர்ந்திருப்பது விக்டர் பிராங்களின் வழி ..
    ஆனால் கமெண்டில் இணைத்திருப்பது நேர மேலாண்மை குழம்ப வேண்டாம்..

    http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்.

    ReplyDelete